/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ குண்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு தங்கம் குண்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு தங்கம்
குண்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு தங்கம்
குண்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு தங்கம்
குண்டு எறிதல் போட்டி காஞ்சி மாணவருக்கு தங்கம்
ADDED : அக் 06, 2025 12:50 AM

காஞ்சிபுரம்:மதுரையில் நடந்த முதல்வர் கோப்பை, மாநில அளவில், பள்ளி மாணவர்களுக்கான, குண்டு எறிதல் போட்டியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.
முதல்வர் கோப்பை, மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டி கடந்த 2ம் தேதி மதுரையில் நடந்தது. இதில், 38 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர் சபரீஷ் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்று காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர் சபரீஷை மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, பயிற்சியாளர் தாஸ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.


