Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ காஞ்சி அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி துவக்கம்

காஞ்சி அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி துவக்கம்

காஞ்சி அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி துவக்கம்

காஞ்சி அல்லாபாத் ஏரி சீரமைப்பு பணி துவக்கம்

ADDED : மார் 28, 2025 01:32 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில், திருக்காலிமேடு செல்லும் வழியில், அல்லாபாத் ஏரி, 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர்நிலையான இந்த ஏரியின் நிலை படுமோசமாக காட்சியளிக்கிறது. ஏரிக்கரைகள் சேதமடைந்து, குப்பை கொட்டியும் பராமரிப்பு இன்றி இருந்தது.

இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என, நகரவாசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி, தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்த ஏரியை சீரமைக்க முடிவு செய்தது.

தனியார் நிறுவனம் தன் தொழிற்சாலை சார்பில் பொக்லைன் வாகனத்தை வழங்கியுள்ளது. இதற்கான டீசல், பராமரிப்பு மற்றும் இதர செலவினங்களை மாநகராட்சி நிர்வாகம் கவனிக்கும். தொண்டு நிறுவனமும் இந்த ஏரி சீரமைப்பில் தன் பங்களிப்பை செய்ய உள்ளது.

இந்த ஏரி சீரமைப்பு பணிகளின் துவக்க நிகழ்ச்சி, திருக்காலிமேட்டில் நேற்று நடந்தது. ஏரி சீரமைப்பு பணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மேயர் மகாலட்சுமி, தனியார் நிறுவன நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாககள், கமிஷனர் நவேந்திரன், கவுன்சிலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us