/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அய்யங்கார்குளம் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசைஅய்யங்கார்குளம் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
அய்யங்கார்குளம் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
அய்யங்கார்குளம் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
அய்யங்கார்குளம் அரசு பள்ளி நுாற்றாண்டு விழா விமரிசை
ADDED : பிப் 25, 2024 12:38 AM

அய்யங்கார்குளம்:காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் நுாற்றாண்டு விழா, ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் தலைமையில் விமரிசையாக நடந்தது.
வட்டார கல்வி அலுவலர் கண்ணன், குழந்தை நல மருத்துவர் யோகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவ- - மாணவியரின் பரதநாட்டியம், ஒயிலாட்டம், நாடகம், திருக்குறள், வரவேற்பு நடனம் உள்ளிட்டவை நடந்தது.
ஊராட்சி துணை தலைவர் திருநாவுக்கரசு பள்ளியின் பெருமை குறித்து பேசினார். தலைமை ஆசிரியை ஜமுனா வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியா நன்றி கூறினார்.
கலை நிகழ்ச்சி மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவ - -மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.