/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புக்கத்துறை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைப்பு புக்கத்துறை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைப்பு
புக்கத்துறை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைப்பு
புக்கத்துறை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைப்பு
புக்கத்துறை சாலையோரம் இரும்பு தடுப்பு அமைப்பு
ADDED : செப் 14, 2025 02:19 AM

உத்திரமேரூர்:புக்கத்துறை நெடுஞ்சாலையோரத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
உத்திரமேரூரில் இருந்து நெல்வாய், பள்ளியகரம் வழியாக புக்கத்துறை செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இருவழிச்சாலையாக இருந்த இச்சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே, இச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி நெடுஞ்சாலைத் துறையினர், முதல் கட்டமாக கடந்த 2021ம் ஆண்டு புக்கத்துறை முதல் குமாரவாடி வரையிலும், மீனாட்சி கல்லுாரி முதல் உத்திரமேரூர் வரையிலும், வேடபாளையம் முதல் அம்மையப்பநல்லுார் வரையிலும், 8.7 கி.மீ., 68 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக பள்ளியகரம் முதல் மங் கலம் வரை, 3 கி.மீ., 22 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதில், பள்ளியகரம் முதல் மங்கலம் வரையுள்ள, சாலையோர பள்ளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் உள்ள பகுதிகளில், சாலையோர இரும்பு தடுப்பு அமைக்கும் பணியில் நெடு ஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.