/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திருமுக்கூடலில் ரூ.18 லட்சத்தில் துவக்கப்பள்ளி கட்டடம் திறப்புதிருமுக்கூடலில் ரூ.18 லட்சத்தில் துவக்கப்பள்ளி கட்டடம் திறப்பு
திருமுக்கூடலில் ரூ.18 லட்சத்தில் துவக்கப்பள்ளி கட்டடம் திறப்பு
திருமுக்கூடலில் ரூ.18 லட்சத்தில் துவக்கப்பள்ளி கட்டடம் திறப்பு
திருமுக்கூடலில் ரூ.18 லட்சத்தில் துவக்கப்பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : ஜன 11, 2024 12:24 AM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடலில் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 52 குழந்தைகள் பயில்கின்றனர்.
இப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதி இல்லாததால், நெருக்கடிக்கு மத்தியில் குழந்தைகள் கல்வி கற்கும் நிலை இருந்தது.
இதனால், திருமுக்கூடல் அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதியினர் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.
இக்கோரிக்கையை ஏற்று, 'ஆதர்ஸ் க்ராம் யோஜனா' திட்டத்தின் கீழ், இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்ட 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணி, கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி மும்முரமாக நடைபெற்று வந்தது. பணி முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து, நேற்று திறப்பு விழா நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், தொடக்கப் பள்ளிக்கான புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார், ஊராட்சி தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.