/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்
ADDED : ஜன 29, 2024 04:13 AM

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், ஊராட்சி கூட்டம், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன.
முதல் முறையாக, பாலர் சபை கூட்டத்தை தேவரியம்பாக்கம் ஊராட்சி துவக்கியது. அதை தொடர்ந்து, அதே ஊராட்சியில் மகிளா சபா என, அழைக்கப்படும் மகளிர் சபை துவக்கப்பட்டு உள்ளது.
அதன் கூட்டம் நேற்று நடந்தது. தேவரியம்பாக்கம் ஊராட்சி முதல் வார்டு உறுப்பினர் சாந்தி தலைமை வகித்தார். மகிளா சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு, தேவரியம்பாக்கம் ஊராட்சி தலைவர் அஜய்குமார் முன்னிலை வகித்தார்.
மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சியாளர் அரவிந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சுயதொழில் செய்யும் பெண்கள், போட்டி தேர்வு மூலமாக அரசு பணி பெற்ற இளம் பெண்கள், ஆடு வழங்கம் திட்டத்தில் பண்ணை விரிவாக்கம் செய்தவர்கள், சிறப்பாக செயல்படும் சுயஉதவிக் குழுக்கள், மாடி மற்றும் வீட்டுத்தோட்டம் பராமரிப்போருக்கு நினைவு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட குடும்ப நல துணை இயக்குனர் மருத்துவர் மலர்விழி, மகளிர் உடல் நலம் மற்றும் குடும்ப நலம் குறித்து, பெண்கள் இடையே விளக்கி பேசினார்.
விழிப்புணர்வு ஊர்வலம், மகளிர் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி மகளிர் திட்ட மேலாளர் சிவகாமி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு தொழில் பயிற்சிகள் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் குறித்து எடுத்துரைத்தார்.