/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை வாலாஜாபாதில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை
வாலாஜாபாதில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை
வாலாஜாபாதில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை
வாலாஜாபாதில் தெரு நாய்கள் தொல்லை அதிகரிப்பு கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை
ADDED : ஜூன் 01, 2025 12:18 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி தெருக்களில், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூட்டமாக திரியும் நாய்கள், சாலையோரம் கிடைப்பதை உண்டு சுற்றித்திரிகின்றன. இவைகளால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர்.
தெருக்களில் கூட்டமாக சுற்றும் நாய்கள், வாகனங்கள் வரும்போது, சாலையின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து, விபத்திற்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர், வாலாஜாபாதில் தங்கி சுற்றுவட்டார தனியார் தொழிற்சாலைகளில் பணி செய்கின்றனர்.
இத்தொழிலாளர்கள், பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது, தெருக்களில் நாய்கள் துரத்துவதால் தினமும் அச்சப்படுகின்றனர்.
வாகனங்களில் செல்வோரையும் துரத்திக் கொண்டே வருவதால், வாகன ஓட்டிகள் கவனம் சிதறி, எதிரே வரும் வாகனங்கள் மீது மோதுதல், அல்லது பள்ளத்தில் விழுந்து காயமடைதல் போன்ற நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இதனால், வாலாஜாபாத் பேரூராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வாலாஜாபாத் பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தெரு நாய்களை பிடிக்க, 'ப்ளு கிராஸ்' அமைப்பு மற்றும் கால்நடைத்துறை வாயிலாக அனுமதி பெற வேண்டியுள்ளது. அவ்வாறு அனுமதி பெற்றாலும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, பிடித்த இடத்திலேயே விட்டுவிட வேண்டும், அவ்வாறு நாய்களுக்கு கருத்தடை செய்ததற்கான ஆவணங்களை மத்திய கால்நடை பராமரிப்பு துறையில் சமர்ப்பித்தல் போன்ற பல்வேறு விதிகள் உள்ளன.
வாலாஜாபாத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்துத்த, விதிகளை கடைபிடித்து, நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.