/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு கூரை வசதி அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 02, 2025 01:23 AM

காஞ்சிபுரம்:திருக்காலிமேடு உயர்நிலைப்பள்ளியில், சைக்கிள் நிறுத்துமிடத்தில் கூரை வசதி ஏற்படுத்த வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவியருக்காக, 'யமஹா மோட்டார்' நிறுவனம் சார்பில், 12 வகுப்பறைகளுடன் புதிதாக கட்டடப்பட்ட பள்ளி கட்டடம் திறப்பு விழா கடந்த மாதம் 10ம் தேதி நடந்தது.
இப்பள்ளியில், 220க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் மாணவ- மாணவியர், தங்களது சைக்கிள் நிறுத்தும் இடத்தில், கூரை வசதி இல்லை. தற்போது, வெயில் சுட்டெரித்து வருவதால், நாள் முழுதும் வெயிலில் நிறுத்தப்படும் சைக்கிள் டியூப்கள் வெடிக்கின்றன. வால்டியூப்பில் ஓட்டை ஏற்படுகிறது.
இதனால், பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ - மாணவியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருக்காலிமேடு அரசு பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் இடத்திற்கு கூரை வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.