/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை விரைவில் அரசாணை வரும் என- எம்.எல்.ஏ., தகவல் உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை விரைவில் அரசாணை வரும் என- எம்.எல்.ஏ., தகவல்
உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை விரைவில் அரசாணை வரும் என- எம்.எல்.ஏ., தகவல்
உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை விரைவில் அரசாணை வரும் என- எம்.எல்.ஏ., தகவல்
உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க நடவடிக்கை விரைவில் அரசாணை வரும் என- எம்.எல்.ஏ., தகவல்
ADDED : செப் 14, 2025 11:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து சாலவாக்கம் ஒன்றியம் உருவாக்குவது தொடர்பான அரசாணை விரைவில் வரும் என, தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், தமிழகத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களில், மிகப் பெரியது. இந்த ஒன்றியத்தில், 73 கிராம ஊராட்சிகளும், 368 குக்கிராமங்களும் உள்ளன.
ஒன்றியத்தின் மேற்கு பகுதியில் உள்ள சாலவாக்கம் பகுதியைச் சுற்றி, 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
சிக்கல் அவற்றில் பினாயூர், பழவேரி, திருமுக்கூடல் போன்ற ஊராட்சிகள் வாலாஜாபாத் அருகிலும், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம் போன்ற ஊராட்சிகள் செங்கல்பட்டு அருகிலும் அமைந்துள்ளன.
இந்த ஊராட்சிகளில் வாழும் கிராமவாசிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், இரண்டு பேருந்துகள் பிடித்து, 25 கி.மீ., கடந்து, உத்திரமேரூர் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மேலும், ஒன்றியத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களில் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டு, நலத்திட்டப் பணிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
எனவே, உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து, உத்திரமேரூரை தலைமையிடமாகக் கொண்டு, 38 ஊராட்சிகளும். சாலவாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு, 35 ஊராட்சிகளும் கொண்ட புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டிய நிலை எழுந்தது.
அரசாணை ஒன்றிய பிரிப்பது தொடர்பான முன்னெடுப்புகள், கருத்து கேட்பு, கருத்துரு தயாரிப்பது போன்றவை 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்தது.
ஆனால், அதற்கு பின் போதிய நடவடிக்கை இல்லாததால், ஒன்றியம் பிரிப்பது தொடர்பான பணிகள் கிடப்பில் இருந்தன. இந்நிலையில், ஒராண்டாக உத்திரமேரூர் ஒன்றியம் பிரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரித்து, சாலவாக்கம் என்ற புதிய ஒன்றியம் பிரிப்பது தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் அரசுக்கு சென்றுள்ளன.
விரைவில் அரசாணை பிறப்பிக்க உள்ளதாக, உத்திரமேரூர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ''உத்திரமேரூர் பிரிக்கப்பட்டு சாலவாக்கம் ஒன்றியம் உருவாக்குவது தொடர்பாக சில நாட்களிலேயே அரசாணை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
''உத்திரமேரூர் ஒன்றியத்துடன், தென் மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு ஒன்றியம் பிரிக்கப்பட உள்ளது. அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.