/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
ADDED : செப் 24, 2025 10:42 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்கள் பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டன.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்டநாவல், பாலேஸ்வரம், காட்டாங்குளம், சிறுமையிலுார், ஆனம்பாக்கம், சிறுதாமூர், பொற்பந்தல் ஆகிய கிராமங்களில், 2025 -- 26ம் நிதி ஆண்டில், பல்வேறு திட்டங்களின் கீழ், 2.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
அதில் செலவில் ஊராட்சி கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளி கட்டடம், ரேஷன் கடை கட்டடம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டன.
புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர் பயன்பாட்டுக்கு நேற்று திறந்து வைத்தார்.
உத்திரமேரூர் ஒன்றியக் குழு துணை சேர்மன் வசந்தி, ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.