/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு
வாலாஜாபாத் ரயில்வே பாலத்தில் மின் விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 12, 2025 11:36 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது, மின்விளக்கு வசதி ஏற்படுத்த 7.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக சென்னை மற்றும் சுங்குவார்சத்திரம் செல்லும் பிரதான சாலை உள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து இச்சாலை வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் வாயிலாக பயணிக்கின்றனர்.
இச்சாலையில், வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனை அடுத்து ரயில்வே மேம்பாலம் உள்ளது.
பாலத்தின் ஒருபுற அணுகு சாலையில் கிதிரிப்பேட்டை, வெள்ளேரியம்மன் கோவில் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலையும், மற்றொரு புறத்தில் வாலாஜாபாத் இந்திரா நகர், சேர்க்காடு, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்கான அணுகு சாலையும் உள்ளது.
ரயில்வே பாலத்திற்கான சாலையில் இதுவரை மின் விளக்கு வசதி ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர். சில நேரங்களில் விபத்துக்கு வழிவகுக்கிறது.
இதனால், வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு மின்வசதி ஏற்படுத்தி தர வாகன ஓட்டிகள், அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ரயில்வே பாலம் மீது, உயர் கோபுர மின்விளக்கு ஏற்படுத்த, காஞ்சிபுரம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 7.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான டெண்டர் விடப்பட்டு விரைவில் பணி துவங்கப்பட உள்ளதாக, வாலாஜாபாத் பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.