Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வெள்ளம் பாதித்த நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு நாளை நிதியுதவி

வெள்ளம் பாதித்த நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு நாளை நிதியுதவி

வெள்ளம் பாதித்த நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு நாளை நிதியுதவி

வெள்ளம் பாதித்த நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு நாளை நிதியுதவி

ADDED : ஜன 11, 2024 01:04 AM


Google News
காஞ்சிபுரம்:தமிழகத்தில் சமீபத்தில் பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கு நிதியுதவி வழங்க, தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச நிதியுதவியாக, 1 லட்சமும் அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாயும், 6 சதவீத வட்டியில் வழங்கப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் மட்டும் இம்முகாமில் விண்ணப்பிக்க முடியும்.

இந்த நிதியுதவி முகாம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்க கட்டடத்தில், நாளை, காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும்.

தொழில் முனைவோர், ஜன., 31ம் தேதி வரை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மறைமலை நகர் கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us