/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலைகிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலை
கிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலை
கிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலை
கிராம சாலை மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு...ரூ.36.17 கோடி:காஞ்சியில் பளபளக்க போகிறது 62 கி.மீ., சாலை
UPDATED : ஜூலை 02, 2025 12:09 PM
ADDED : ஜூலை 02, 2025 12:34 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 62 கி.மீ.,சாலை அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு, 36.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பணி முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்கள் உள்ளடக்கிய காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டங்கள் இயங்கி வருகின்றன.
இவை அனைத்தும், நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதில், 1,122 கி.மீ., துார சாலைகள் உள்ளன.
கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில், வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.
இதுதவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 596 கி.மீ., துாரம் கிராமப்புற சாலைகள் மற்றும், 400 கி.மீ., துாரம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., துாரம் சாலைகள் உள்ளன.
இந்த சாலைகள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதில், ஒரு சில சாலைகளை முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
![]() |
அதன்படி, 17 ஒன்றிய சாலைகள், 22 கிராமப்புற சாலைகள் என, 39 சாலைகளை முதல்வர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் சீரமைக்க, 37.52 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசிற்கு ஊரக வளர்ச்சி துறையினர் பரிந்துரை செய்தனர். இதில், 62 கி.மீ., துாரம், 39 சாலைகளை சீரமைக்க 36.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சமீபத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்கவும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர். இதன் மூலமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 62 கி.மீ., துாரத்திற்கு புதிய சாலைகள் கிடைக்கும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 39 பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு, கடந்த மாதம் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக முறையாக டென்டர் விடப்பட்டுள்ளது. ஆறு மாதங்களில் பணி முடிக்க பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், புதிய சாலைகள் போடும் போது, சிறிய அளவிலான தரைப்பாலம் அருகே தடுப்பு மற்றும் பிரதான சாலைகள் கூடுமிடங்களில் வேகத்தடைகள் அமைப்பதில்லை.
குறிப்பாக, புதிய சாலையோரம் இருபுறமும், வெள்ளை நிற பெயின்ட் அடிக்கப்படுகிறது. வேகத்தடைகள் மீதும், தரைப்பாலங்களின் அருகே எச்சரிக்கை பெயின்ட் அடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.