/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாதாள சாக்கடையில் உணவு கழிவுகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பாதாள சாக்கடையில் உணவு கழிவுகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் உணவு கழிவுகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் உணவு கழிவுகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் உணவு கழிவுகள் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ADDED : செப் 24, 2025 02:52 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள ஹோட்டல்களில் மீதமாகும் உணவு கழிவுகளை வடிகட்டாமல் வெளியேற்றுவதால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் கோவில், சினிமா தியேட்டர், தனியார் மருத்துவமனை, பல்வேறு வணிக வளாகங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, வேலுார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில் உள்ள சில ஹோட்டல்களில் மீதமாகும் உணவு கழிவுகளை வடிகட்டாமல் வெளியேற்றுகின்றனர்.
இதனால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் துர்நாற்றத்துடன் கழிவுநீர் வழிந்தோடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால், இச்சாலையில் நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, உணவு கழிவுகளை வடிகட்டாமல், பாதாள சாக்கடையில் வெளியேற்றும் ஹோட்டல்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.