/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிலைக்கு மனு கொடுத்த விவசாயிகள்கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிலைக்கு மனு கொடுத்த விவசாயிகள்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிலைக்கு மனு கொடுத்த விவசாயிகள்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிலைக்கு மனு கொடுத்த விவசாயிகள்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் சிலைக்கு மனு கொடுத்த விவசாயிகள்
ADDED : பிப் 24, 2024 12:21 AM

கூடுவாஞ்சேரி:திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மேல்மா சிப்காட் திட்டத்திற்கு, 3,174 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் துவங்கி உள்ளன.
அதனால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல், நடைபயணம், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு, சாலைகளில் கஞ்சி காய்ச்சுதல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். இப்பிரச்னையில் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டசபை கூட்டத்தொடரில்,பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, 'மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைதானவர்கள் யாரும் விவசாயிகள் இல்லை.
அவர்களுக்கு 1 சென்ட் நிலம் கூட இல்லை' என பேசியதாக, விவசாயிகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் வேலுவை பதவி நீக்கம் செய்யக்கோரியும், சிப்காட் திட்டத்தை கைவிடக் கோரியும், 19 பெண்கள் உட்பட 23 பேர், முதல்வரை சந்திக்க தலைமை செயலகம் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பின், இரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.
அப்போது, போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதோடு, பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்த கருணாநிதி சிலையிடம் கோரிக்கை மனுக்களை அளித்து, நுாதன முறையில் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த கிளாம்பாக்கம் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.