/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குறுவை சாகுபடி தொகுப்புக்கு விவசாயிகளுக்கு அழைப்புகுறுவை சாகுபடி தொகுப்புக்கு விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சாகுபடி தொகுப்புக்கு விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சாகுபடி தொகுப்புக்கு விவசாயிகளுக்கு அழைப்பு
குறுவை சாகுபடி தொகுப்புக்கு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 15, 2025 07:55 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டாரத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு பெற விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து, உத்திரமேரூர் வேளாண் உதவி இயக்குநர் முத்துலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு, நெல் இயந்திர நடவு மானியம், தரமான சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
அதில், இயந்திர நடவு முறையில் நெல் நடவு மேற்கொண்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. உத்திரமேரூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு 1,500 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், குடும்ப அட்டை நகல், இயந்திர நடவு மேற்கொண்ட ரசீது, இயந்திர நடவு வயலில் நின்றபடி இருக்கும் விவசாயியின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை அந்தந்த தொகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் சமர்ப்பிக்கலாம். அதேபோல, தரமான சான்று பெற்ற விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் ஆகியவை பெற தேவையான சான்றுகளை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.