/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வாலாஜாபாதில் சொர்ணவாரி சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்வாலாஜாபாதில் சொர்ணவாரி சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
வாலாஜாபாதில் சொர்ணவாரி சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
வாலாஜாபாதில் சொர்ணவாரி சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
வாலாஜாபாதில் சொர்ணவாரி சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஜூன் 03, 2025 12:50 AM

வாலாஜாபாத், வாலாஜாபாத் வட்டார மொத்த நிலப்பரப்பில் 60 சதவீதம் விவசாய நிலங்களை உள்ளடங்கியதாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள், ஏரி பாசனம், கிணற்று பாசனம் மற்றும் ஆற்று பாசனம் வாயிலாக, சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய மூன்று பருவங்களிலும் பெரும்பாலும் நெல் பயிரிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு பருவ மழையை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும் நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்பயிர்களில் தற்போது 90 சதவீதம் அறுவடை செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட சொர்ணவாரி பருவத்திற்கான சாகுபடி பணிகளை தற்போது விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
நவரை பட்ட நெல் சாகுபடிக்கு, நாற்று நடவு முறையை காட்டிலும், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறைறே கடைபிடித்தனர்.
இதேபோன்று, வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி, கட்டவாக்கம், அயிமிச்சேரி, மஞ்சமேடு, கோவளவேடு, அங்கம்பாக்கம், அவளூர், அசூர் உள்ளிட்ட பல பகுதிகளில், சொர்ணவாரி பட்ட நெல் சாகுபடிக்கும், தற்போது நேரடி நெல் விதைப்பு முறையிலான சாகுபடியையே விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.
நேரடி நெல் விதைப்பு சாகுபடியில், செலவு குறைவு மற்றும் மகசூல் கணிசமாக கிடைப்பதாக, இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.