/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ஏரியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2025 01:18 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவில் ஊராட்சியில், மிளகர்மேனி துணை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் செல்லும் கரும்பாக்கம் சாலை அருகே, 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.
இந்த ஏரி மிளகர்மேனி, கரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு, முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்த ஏரியில் முழுமையாக மழைநீர் நிரம்பும்போது, 250 ஏக்கர் விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுகிறது. தற்போது, இந்த ஏரி முறையாக பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளன.
இந்த கருவேல மரங்கள் ஏரியில் தேங்கியுள்ள நீரை வேகமாக உறிஞ்சி, நிலத்தடி நீர் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. மேலும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன், கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
எனவே, மழைக்காலம் துவங்கும் முன் ஏரியில் வளர்ந்துள்ள, கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.