/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 10, 2025 03:17 AM

ஸ்ரீபெரும்புதுார்:வைப்பூர் உப்பு குட்டையை துார்வாரி சீரமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள உப்பு குட்டை, அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், குளிக்கவும், கால்நடைகள் தாகத்தை தீர்க்கவும், அப்பகுதி மக்கள் இந்த குட்டையை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக குட்டை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குட்டையின் கரைகள் முழுதும் கருவேல மரங்கள் வளர்ந்தும், செடிகள் படர்ந்தும் உள்ளன.
இந்த நிலையில், அருகே உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நேரடியாக குட்டைக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் கலக்க விடுவதால் தண்ணீர் மாசடைந்தது.
இதனால், குட்டைக்கு வரும் நீர்வரத்து கால்வாய் அடைக்கப்பட்டது. இதனால், தற்போது குட்டையில் நீர்த்தேக்கம் செய்ய முடியாமல் வறண்டு உள்ளது.
அவ்வப்போது மழை பெய்தாலும் குட்டைக்கு தண்ணீர் வருவது இல்லை. இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் நிலை உள்ளது.
எனவே, அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும், குட்டையை துார்வாரி புதுப்பித்து, நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.