/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ரூ.10 கோடிக்கு மது விற்பனைஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ரூ.10 கோடிக்கு மது விற்பனை
ADDED : ஜன 03, 2024 12:30 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் 93 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டை ஒட்டி, அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபானங்கள் இருப்பு வைத்திருக்கும்படி, அனைத்து கடைகளுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. புத்தாண்டை ஒட்டி வழக்கமான நாட்களை விட டிச., 31 மற்றும் ஜன., 1ல் மதுபான விற்பனை களை கட்டியுள்ளது.
அதன்படி டிச.,31ல், 5 கோடி ரூபாய்க்கும், புத்தாண்டு தினமான ஜன., 1ல், 5.50 கோடி ரூபாய் என, இரு நாட்களில் மட்டும் 10.50 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.
இதில், நகர்ப்புற டாஸ்மாக் கடைகளில் சராசரி நாட்களில் விற்பனையைவிட, மும்மடங்கு மதுபானம் விற்பனையாகிய உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.