/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
குடிநீர் தொட்டி சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 11, 2024 12:19 AM
களக்காட்டூர்:களக்காட்டூர் ஊராட்சி, ராமாபுரம் தெருவில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் ஆதாரத்திற்காக 10 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் சார்பில், சிறுமின்விசை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தெருவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இரு ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது.
மேலும், ஆழ்துளை குழாயில் இருந்து குடிநீர் தொட்டிக்கு செல்லும் பைப்லைன் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டியின் பீடமும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, ராமாபுரம் தெருவில் பயன்பாடின்றி வீணாகும் குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.