/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஹயக்ரீவர் சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனைஹயக்ரீவர் சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனை
ஹயக்ரீவர் சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனை
ஹயக்ரீவர் சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனை
ஹயக்ரீவர் சன்னிதியில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED : ஜன 29, 2024 04:02 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், துாப்புல் பரகால மடத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு என, தனி சன்னிதி உள்ளது.
இங்கு ஆண்டுதோறும், உலக நன்மைக்காகவும், மாணவ - மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும், கல்வி அபிவிருத்திக்காகவும் கல்வி கடவுளான லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏகதின சிறப்பு லட்சார்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஏகதின லட்சார்ச்சனை நேற்று நடந்தது.
இதில், பரகால மடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு நேற்று காலை 8:30 மணி முதல், பிற்பகல் 12:00 மணி வரையும், மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரையும் அர்ச்சனை செய்யப்பட்டது.
இதில், திரளான பள்ளி, கல்லுாரி மாணவ- - மாணவியர் பெற்றோருடன் பங்கேற்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து, பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் உள்ளிட்டவைகளை சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனர்.