Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவக்கம்

ADDED : செப் 22, 2025 10:48 PM


Google News
காஞ்சிபுரம்:பொன்னியம்மன் கோவிலில் தசரா திருவிழா இன்று துவங்குகிறது.

காஞ்சிபுரம் அடுத்த பெரிய நத்தம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டு தசரா திருவிழா இன்று துவங்குகிறது.

முதல் நாள் தேவி கருமாரியம்மன் அலங்காரம்; இரண்டாவது நாளில், காமாட்சியம்மன் அலங்காரம்; மூன்றாவது நாளில், அன்னபூரணி அலங்காரம்; நான்காவது நாளில், காமதேனு அலங்காரம்; ஐந்தாவது நாளில் கம்பா நதி அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள உள்ளார்.

ஆறாவது நாளில், மீனாட்சி அலங்காரம்; ஏழாவது நாளில், குபேர தனலட்சுமி அலங்காரம்; எட்டாவது நாளில் துர்கை அலங்காரம்; ஒன்பதாவது நாளில், சரஸ்வதி அலங்காரம்; 10வது நாளில் சந்தன அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள உள்ளார் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us