/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஓரிக்கையில் துரியோதனன் படுகளம் விமரிசைஓரிக்கையில் துரியோதனன் படுகளம் விமரிசை
ஓரிக்கையில் துரியோதனன் படுகளம் விமரிசை
ஓரிக்கையில் துரியோதனன் படுகளம் விமரிசை
ஓரிக்கையில் துரியோதனன் படுகளம் விமரிசை
ADDED : மே 26, 2025 12:58 AM

ஓரிக்கை:காஞ்சிபுரம் ஓரிக்கை திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மதியம் 2:00 மணிக்கு மஹாபாரத சொற்பொழிவு நடந்தது. இதில், ரத்தின தனஞ்செயன், மஹாபாரத சொற்பொழிவாற்றினார்,. ராஜநிதி இன்னிசை நிகழ்த்தினார்.
கடந்த 15ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், குண்டையார்தண்டலம் ஸ்ரீமாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத நாடகம் நடந்து வந்தது. இதில், 19வது நாளான நேற்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை ஓரிக்கை கிராமத்தினர் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.