/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/துரைப்பாக்கம் பெண் தொழிலதிபர் பண மோசடி விவகாரத்தில் கைதுதுரைப்பாக்கம் பெண் தொழிலதிபர் பண மோசடி விவகாரத்தில் கைது
துரைப்பாக்கம் பெண் தொழிலதிபர் பண மோசடி விவகாரத்தில் கைது
துரைப்பாக்கம் பெண் தொழிலதிபர் பண மோசடி விவகாரத்தில் கைது
துரைப்பாக்கம் பெண் தொழிலதிபர் பண மோசடி விவகாரத்தில் கைது
ADDED : பிப் 11, 2024 12:27 AM
சென்னை:சென்னை, வடபழனி - சைதாப்பேட்டை சாலையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 31. இவர், வீட்டிலேயே நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவருக்கு, தி.நகரில் வர்த்தகம் மற்றும் நேவிகேட்டர் சுற்றுப்பயணங்கள் நிறுவனம் நடத்தி வரும் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ரிதன்யா, 38, என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அவரது நிறுவனத்தின் விளம்பரத்திற்காக, சின்னத்திரை பிரபலங்களை வைத்து, காரைக்குடியில் கடந்தாண்டு நவம்பரில் விஜயகுமார் நிகழ்ச்சி நடத்தினார்.
அதற்கான மொத்த தொகை, 2.35 லட்சம் ரூபாய். இதில், 50,000 ரூபாய் முன்பணமாகவும், நிகழ்ச்சி முடிந்து பின், 50,000 ரூபாயும் பெற்றுள்ளார். மீதமுள்ள 1.35 லட்சம் ரூபாய் அளிக்காமல் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, விஜயகுமார் கடந்த மாதம் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி ரிதன்யாவை போலீசார் தேடி வந்தனர்.
மற்றொரு புகார்
இதேபோல், பரணிப்புத்துார், சின்ன பனிச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ், 32. இவர் ரிதன்யாவின் நிறுவனத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
ரிதன்யாவின் அறிவுறுத்தல்படி, கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை, 11.40 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார்.
இதில், 2.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம் மட்டும் திருப்பி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 9.05 லட்சம் ரூபாய் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
மேலும், பணத்தை திருப்பி கேட்டபோது, அவதுாறாக பேசி கையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கடந்த 9ம் தேதி மாம்பலம் காவல் நிலையத்தில் சதீஷ் புகார் அளித்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக ரிதன்யா செல்வதாக, மாம்பலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், நீதிமன்றம் அருகே வைத்து ரிதன்யாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.