/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/இரு லாரிகள் மோதல் டிரைவர் உயிரிழப்புஇரு லாரிகள் மோதல் டிரைவர் உயிரிழப்பு
இரு லாரிகள் மோதல் டிரைவர் உயிரிழப்பு
இரு லாரிகள் மோதல் டிரைவர் உயிரிழப்பு
இரு லாரிகள் மோதல் டிரைவர் உயிரிழப்பு
ADDED : ஜன 08, 2024 05:31 AM
ஸ்ரீபெரும்புதுார் : கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 37, லாரி ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, கர்நாடக மாநிலம் நங்களில் இருந்து, லாரியில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வந்து கொண்டிருந்தார்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த, கீராநல்லுார் சந்திப்பு அருகே வந்த போது, லாரியில் உள்ள காய்கறி மூட்டைகளின் மேல் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளது.
இதனால், ஓட்டுனர் சுப்ரமணி லாரியை சாலையின் ஓரம் நிறுத்தி, அவிழ்ந்த கயிற்றினை கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே திசையில் வந்த மற்றொரு லாரி, நின்றிருந்த காய்கறி லாரியின் மீது மோதியது. இதில், இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி, சுப்ரமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரியை ஓட்டி வந்த, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த அருள், 29, என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இது குறித்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீசார், காயங்களுடன் இருந்த அருளை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.
விபத்தில் உயிரிழந்த சுப்ரமணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.