ADDED : ஜன 04, 2024 09:24 PM
காஞ்சிபுரம்:தடுப்பூசி போடும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் நிகழ்வு குறித்த, மாவட்ட அளவிலான மருத்துவர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ் தலைமை வகித்தார்.
இதில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன், டாக்டர் பொன்ஆதிரை, இந்திய குழந்தை நல மருத்துவர்கள் சங்க மாவட்ட மருத்துவ கல்வி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முரளிகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின், பெண்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, அவசர உதவிக்கு யாரை அணுகுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.