/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி
கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பேரணி
ADDED : ஜூன் 28, 2025 11:56 PM

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் பேரணி நடந்தது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், உத்திரமேரூர் ஒன்றியக் கிளை சார்பில், 5வது ஒன்றிய மாநாடு, ஒன்றிய செயலர் மாரி தலைமையில், உத்திரமேரூரில் நேற்று நடந்தது.
சங்க மாவட்ட செயலர் முனுசாமி, ஒன்றிய பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நேற்று, காலை 11:00 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பங்கேற்ற பேரணி நடந்தது.
அதில், மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை உயர்த்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 100 நாள் வேலையை 150ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு ஏ.ஒய்.ஒய்., குடும்ப அட்டையை வழங்கிட வேண்டும். சாலையோரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும்.
உத்திரமேரூர் ஒன்றிய, தாலுகா அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சாய்தள பாதை வசதியை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.