/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசை பனிப்பொழிவிலும் பக்தி பரவசத்தில் பக்தர்கள்செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசை பனிப்பொழிவிலும் பக்தி பரவசத்தில் பக்தர்கள்
செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசை பனிப்பொழிவிலும் பக்தி பரவசத்தில் பக்தர்கள்
செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசை பனிப்பொழிவிலும் பக்தி பரவசத்தில் பக்தர்கள்
செய்யாற்றில் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசை பனிப்பொழிவிலும் பக்தி பரவசத்தில் பக்தர்கள்
ADDED : ஜன 27, 2024 11:40 PM

காஞ்சிபுரம், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், தைப்பூச திருவிழா, கடந்த 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், தினமும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
ஐந்தாம் நாள் உற்சவமான, ஜன., 21ல் திருக்கல்யாண உற்சவமும், ஏழாம் நாள் உற்சவமான ஜன., 23ல் தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உற்சவமான, ஜன., 25ல், 63 நாயன்மார்கள் உற்சவமும் விமரிசையாக நடந்தது.
இதில், 10ம் நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு, 22 ஊர் சுவாமிகள் செய்யாற்றில் எழுந்தருளும் தைப்பூச ஆற்று திருவிழா விமரிசையாக நடந்தது.
இதில், செய்யாற்றை சுற்றியுள்ள, பெருநகர், உக்கல், ஆக்கூர், மானாம்பதி, கீழ்நேத்தப்பாக்கம், வெங்கடாபுரம், விசூர், தண்டரை, தேத்துறை, சேத்துப்பட்டு, இளநகர், கீழ்நீர்குன்றம், இளநீர்குன்றம், அத்தி, மேல்பாக்கம், கூழமந்தல், மகாஜனம்பாக்கம், வெள்ளாமலை, மடிப்பாக்கம், அகத்திஅப்பா நகர், நெடுங்கல், குன்னவாக்கம் ஆகிய 22 கிராம கோவில் சுவாமிகள், செய்யாற்றில் சங்கமித்தனர்.
அங்கு 22 ஊர் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதை தொடர்ந்து, நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிகள் ஆற்றுக்குள் இறங்கி பக்தர்களுக்கு தைப்பூச தரிசனம் அளித்தனர்.
பின், அந்தந்த ஊர் கோவில்களுக்கு, சுவாமி புறப்பாடு நடந்தது. தொடர் அரசு விடுமுறை என்பதால், ஆற்று பகுதிக்குள் நிலவிய கடுமையான பனிப்பொழிவிலும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச விழாவில் பங்கேற்று பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியதால், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.