/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வாலாஜாபாதில் பேனர்கள் அகற்ற வலியுறுத்தல் வாலாஜாபாதில் பேனர்கள் அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாதில் பேனர்கள் அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாதில் பேனர்கள் அகற்ற வலியுறுத்தல்
வாலாஜாபாதில் பேனர்கள் அகற்ற வலியுறுத்தல்
ADDED : மே 26, 2025 12:59 AM

வாலாஜாபாத்:வாலாாஜாபாத் - காஞ்சிபுரம், வாலாஜாபாத் - செங்கல்பட்டு மற்றும் வாலாஜாபாத் - ஒரகடம் சாலை பகுதிகளில், தனியார் கடை மற்றும் அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர்கள் அதிகரித்து வருகின்றன.
இதேபோன்று, வாலாஜாபாத் ராஜவீதி பேருந்து நிறுத்தம், ரவுண்டனா சாலை பேருந்து நிறுத்தம் மற்றும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் பல்வேறு பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. சாலையோரங்களில் அதிக எடை கொண்ட உயரமான பேனர்களும் உள்ளதால், காற்று, மழை நேரங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, சாலையோரங்களில் ஆபத்தான நிலையிலான பேனர்களை அகற்ற, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.