/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போலி மருத்துவர்கள் சோதனையை கிராமங்களில் தீவிரப்படுத்த கோரிக்கை போலி மருத்துவர்கள் சோதனையை கிராமங்களில் தீவிரப்படுத்த கோரிக்கை
போலி மருத்துவர்கள் சோதனையை கிராமங்களில் தீவிரப்படுத்த கோரிக்கை
போலி மருத்துவர்கள் சோதனையை கிராமங்களில் தீவிரப்படுத்த கோரிக்கை
போலி மருத்துவர்கள் சோதனையை கிராமங்களில் தீவிரப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 20, 2025 10:35 PM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் போலி மருத்துவர்கள் பற்றிய சோதனையை, மருத்துவ துறை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல், சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் தொடர்ந்து பரவி வருகின்றன.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாமல், அந்தந்த தாலுகா மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளிலும், நுாற்றுக்கணக்கான புறநோயாளிகள் காய்ச்சல் தொடர்பாக, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால், மருத்துவமனைகளில் புறநோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலைவலி, காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளுக்கு, வீட்டருகே உள்ள கிளினிக்குகளில் ஏராளமானோர் சிகிச்சை பெறுகின்றனர். அவ்வாறு, சிகிச்சை அளிப்போரில், போலி மருத்துவர்களும் இருப்பது, மருத்துவ துறை அதிகாரிகளின் சோதனை மூலம் அடிக்கடி தெரியவருகிறது.
காஞ்சிபுரம் நகரிலும், சுற்றி உள்ள கிராமப்புறங்களிலும் பல போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் ஒளிந்திருக்கும் போலி மருத்துவர்கள் அளிக்கும் தவறான சிகிச்சையால், கிராம மக்கள் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே கிராமப்புறங்களில் செயல்படும் மருத்துவர்கள், உரிய மருத்துவ படிப்பை முடித்துள்ளனரா, சான்றிதழின் உண்மைத் தன்மை போன்றவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.