/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவக்கம் அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவக்கம்
அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவக்கம்
அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவக்கம்
அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 07:38 PM
வாலாஜாபாத்:பழையசீவரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக சாலையோரம் இருந்த பயணியர் நிழற்குடை கட்டடங்கள் அகற்றப்பட்டன.
அதன்படி, வாலாஜாபாத் அடுத்த, பழையசீவரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்த பகுதியில் இருந்த நிழற்குடை கட்டடம் அகற்றப்பட்டது.
பின், விரிவாக்கப் பணி முடிவுற்ற பகுதிகளில், அகற்றம் செய்த நிழற்குடை கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால், பழையசீவரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் போதுமான இடவசதி இல்லை எனக்கூறி நிழற்குடை கட்டடம் கட்டாமல் விடுபட்டது.
இந்நிலையில், 400 குடும்பத்தினர் மற்றும் அருகாமையில் ரயில் நிலையம் உள்ள அப்பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக நிழற்குடை கட்டடம் தேவை என, அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பழையசீவரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டுமான பணி மீண்டும் நேற்று துவங்கப்பட்டுள்ளது.