Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புத்தகரத்தில் ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணி

புத்தகரத்தில் ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணி

புத்தகரத்தில் ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணி

புத்தகரத்தில் ரூ.78 லட்சத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணி

ADDED : செப் 18, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
வாலாஜாபாத்:புத்தகரத்தில், 78 லட்சம் ரூபாய் செலவில் புதிய சமுதாயக்கூடத்திற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது புத்தகரம் கிராமம். புத்தகரம் மற்றும் அதைச் சுற்றி உள்ள மருதம், கரூர், கிதிரிப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், திருமணம் உள்ளிட்ட குடும்ப விசேஷங்களை நடத்த வாலாஜாபாத் தனியார் மண்டபங்களை தேடி செல்கின்றனர்.

இதனால், போக்குவரத்து மற்றும் மண்டபத்திற்கான வாடகை செலவு போன்றவற்றை சமாளிப்பதில் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தங்கள் பகுதியில் சமுதாயக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என, பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

அதையடுத்து, புத்தகரத்தில் சமுதாயக்கூடம் கட்ட தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக நிதியின் கீழ், 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த பிப்ரவரியில் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணியை விரைந்து முடித்து சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us