ADDED : ஜன 30, 2024 11:49 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கீழ்பெரமநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் மகன் நந்தா கிஷோர், 18. இவர், காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கணினி அறிவியல் படித்து வந்தார்.
இந்நிலையில், கல்லுாரிக்கு செல்ல விருப்பமில்லை என, உறவினர்களிடம் கூறி வந்தார். மன அழுத்தத்தில் இருந்த நந்தா கிஷோர், நேற்று முன்தினம் தன் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அவரது தந்தை முனியன், மாகரல் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாணவர் இறப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.