/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கலெக்டரின் நேர்முக உதவியாளர் திடீர் மாற்றம்கலெக்டரின் நேர்முக உதவியாளர் திடீர் மாற்றம்
கலெக்டரின் நேர்முக உதவியாளர் திடீர் மாற்றம்
கலெக்டரின் நேர்முக உதவியாளர் திடீர் மாற்றம்
கலெக்டரின் நேர்முக உதவியாளர் திடீர் மாற்றம்
ADDED : பிப் 24, 2024 12:36 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது பிரிவுக்கான துணை கலெக்டர் பணியிடம் நீண்ட நாட்களாகவே நிரப்பப்படாமலேயே இருந்தது.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக, யோகஜோதி என்பவர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்- பொது பிரிவுக்கு, வருவாய் துறை கமிஷனர் அலுவலகம் நியமித்திருந்தது.
இவர், ஒரு வாரத்திற்கு முன்பாக பொறுப்பேற்றார்.
கலெக்டர் அலுவலகத்தில், அரசு அலுவலர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும் எனவும், அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும், 'ஜீன்ஸ், லெக்கின்ஸ்' போன்ற ஆடை கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், திடீரென இவர் மாற்றப்பட்டு, ஈரோடு மாவட்டம், வருவாய் கோட்டாட்சியரான திவ்ய பிரியதர்ஷினி என்பவரை வருவாய் துறை கமிஷனர் அலுவலகம் நியமித்துள்ளது.