/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டுகாஞ்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
காஞ்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
காஞ்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
காஞ்சி மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : ஜூன் 20, 2025 02:34 AM

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அரசு மாதிரி பள்ளியில், பிளஸ் 2 பயின்று, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் வெற்றி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில், மணி சர்மா என்ற மாணவர் சேர்ந்துள்ளார்.
அவரை தன் அலுவலகத்திற்கு அழைத்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பாராட்டி, அவருக்கு தேவையான கல்வி உபகரணங்கள், புத்தாடை வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டினார். உடன், ஸ்ரீபெரும்புதுார் சப் - கலெக்டர் மிருணாளினி, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் இருந்தனர்.