/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை ஆர்.எஸ்.பி., சாம்பியன்சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை ஆர்.எஸ்.பி., சாம்பியன்
சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை ஆர்.எஸ்.பி., சாம்பியன்
சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை ஆர்.எஸ்.பி., சாம்பியன்
சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை ஆர்.எஸ்.பி., சாம்பியன்
ADDED : பிப் 23, 2024 10:59 PM

சென்னை:அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டியில், சென்னை வட்டார விளையாட்டு வாரிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அகில இந்திய சிவில் சர்வீஸ் அணிகளுக்கான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள், மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில், கடந்த 18ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
நாடு முழுதும் உள்ள மத்திய அரசு பணியாளர்களைக் கொண்ட அணிகள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. இதில் இருபாலரிலும், சென்னை ஆர்.எஸ்.பி., - மும்பை, ஹரியானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
மகளிருக்கான பிரிவில், வருமான வரித்துறை உட்பட, மத்திய அரசின் ஆர்.எஸ்.பி., எனும் சென்னை வட்டார விளையாட்டு வாரியம் சார்பில் பங்கேற்ற அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், சென்னை ஆர்.எஸ்.பி., - மஹாராஷ்டிரா அணிகள் மோதின.
இதில், 25 - 12, 25 - 10, 25 - 13 என்ற கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.