/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாவட்ட வள மையத்தின் பொறுப்பு மாற்றம் மாவட்ட வள மையத்தின் பொறுப்பு மாற்றம்
மாவட்ட வள மையத்தின் பொறுப்பு மாற்றம்
மாவட்ட வள மையத்தின் பொறுப்பு மாற்றம்
மாவட்ட வள மையத்தின் பொறுப்பு மாற்றம்
ADDED : மார் 15, 2025 06:42 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், மறுசீரமைக்கப்பட்ட ராஷ்டிட்ரிய கிராம் ஸ்வராஜ் திட்ட பணிகளை ஊராட்சிகளில், மாவட்ட வள மையம் செயல்படுத்தி வருகிறது.
இதன் பொறுப்பு, ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் இருந்து விடுவிக்கப்பட்டு, மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மார்ச் -28ம் தேதி முதல், மாவட்ட ஊராட்சி செயலரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளது.
இனிமேல், மாவட்ட அளவில் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், வட்டார வள மைய பயிற்றுநர்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.