ADDED : மே 18, 2025 01:56 AM

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ், 26. இவரது சகோதரர் பிரகாஷ்ராஜ், 28. இருவரும், அதிகாலை 2:30 மணிக்கு, குன்றத்துார் நோக்கி 'ஹூண்டாய் ஐ20 -- மேக்னா' காரில் சென்றனர்.
சோமங்கலம் - குன்றத்துார் சாலை, பூந்தண்டலத்தை கடந்தபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியேறி தீப்பற்றியது. சுதாரித்த இருவரும், காரை நிறுத்தி, இறங்கி காயமின்றி தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். எனினும், கார் முழுதும் எரிந்து நாசமானது. இது குறித்து, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.