/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/அலுவலகம் தெரியாமல் குழப்பம் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?அலுவலகம் தெரியாமல் குழப்பம் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?
அலுவலகம் தெரியாமல் குழப்பம் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?
அலுவலகம் தெரியாமல் குழப்பம் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?
அலுவலகம் தெரியாமல் குழப்பம் வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?
ADDED : ஜன 13, 2024 12:44 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம், கடந்த நான்கு ஆண்டுகளாக ஓரிக்கையில் இயங்கி வருகிறது. மாவட்ட பதிவாளர் அலுவலகத்துடன், இணை பதிவாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது.
போலி பத்திரங்களை ரத்து செய்வதற்கு விண்ணப்பம் செய்யவும், விசாரணை மற்றும் புகார் தெரிவிக்கவும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும்ஏராளமானோர் வருகின்றனர்.
அதேபோல், இணை பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரம் பதிவு செய்ய உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூரிலிருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
அவ்வாறு வந்து செல்லும் வெளியூர்வாசிகளுக்கு, இந்த பதிவாளர் அலுவலக கட்டடம் எங்கு செயல்படுகிறது என தெரியாமல், குழப்பம் அடைகின்றனர்.
ஓரிக்கை பகுதியிலும், பெரியார் நகர் பகுதியிலும் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லும் வழி என, எந்த வழிகாட்டி பலகையும் இல்லாததால், பலரும் குழப்பமடைந்து, காஞ்சிபுரம் நகருக்குள் செல்கின்றனர்.
இதனால், வீண் அலைச்சல் ஏற்படுவதாக வெளியூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பெரியார் நகர், ஓரிக்கை, செவிலிமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழிகாட்டி பலகை வைக்க வேண்டும் என, பத்திரப்பதிவு செய்ய வருவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.