/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடி பயிலரங்குசங்கரா பல்கலையில் ஓலைச்சுவடி பயிலரங்கு
சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடி பயிலரங்கு
சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடி பயிலரங்கு
சங்கரா பல்கலையில் ஓலைச்சுவடி பயிலரங்கு
ADDED : மே 23, 2025 02:08 AM

ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலைப் பல்கலையில், இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில், ஓலைச்சுவடி பிரிவு ஏற்பாடு செய்திருந்த, 'அடிப்படை படியெடுத்தல்' பயிலரங்கு நிறைவு விழா நேற்று நடந்தது.
இதில், தாய்லாந்து நாட்டின் அரசு துணை துாதர் ஸ்ரீ ராச்சா அரிபர்க், ஓலைச்சுவடி பிரிவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய நுட்பங்கள் குறித்து பேசினார்.
சமஸ்கிருதத் துறைத் தலைவர் ஜெபஜோதி ஜனா வரவேற்றார். சார்பு துணைவேந்தர் பேராசிரியர் வசந்த்குமார் மேதா தலைமை வகித்தார்.
அறிவியல் பிரிவு மற்றும் கல்வியியல் பிரிவு தலைவர் பேராசிரியர் வெங்கட்ரமணன் பயிலரங்கம் தொடர்பான கருத்தரங்க உரையாற்றினார்.
இதில், 50 பேர் பங்கேற்று, பண்டைய கிரந்த எழுத்துக்களை புரிந்து கொள்ள பயிற்சி பெற்றனர்.