ADDED : ஜன 30, 2024 08:01 PM

கட்டி சம்பா நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி கே.சசிகலா கூறியதாவது:
நம்மூர் களி மண், செம்மண்ணுக்கு பாரம்பரிய ரக நெல் மற்றும் அனைத்து விதமான பழங்களை சாகுபடி செய்யலாம். மேலும், விளை நிலங்கள் மற்றும் மாடித் தோட்டங்களில், அனைத்து விதமான பழங்களையும் சாகுபடி செய்யலாம்.
கட்டி சம்பா பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, 110 நாட்களில் விளையக்கூடிய குறுகிய கால பயிராகும். தை பட்டத்தில், நெல் நடவு செய்தால், கோடை துவங்கும் முன் அறுவடை செய்து விடலாம்.
இயற்கை முறையில் சாகுபடி செய்தால், ஒரு ஏக்கருக்கு, 15 நெல் மூட்டைகளும், ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தால், ஒரு ஏக்கருக்கு 35 நெல் மூட்டைகள் மகசூல் கொடுக்கும்.
இந்த பாரம்பரிய ரக நெல்லை, அரிசியாக மாற்றி விற்பனை செய்யும் போது, அதிக வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:
- -கே.சசிகலா,
94455 31372.