ADDED : பிப் 12, 2024 06:12 AM
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் காவல் எல்லைக்கு உட்பட்ட கிளியா நகரில், திரவுபதி அம்மன் மற்றும் எல்லையம்மன் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு, இந்த இரண்டு கோவில்களின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களான தாம்பூல தட்டு, கோவில் மணி, விளக்கு மற்றும் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து, 30,000 ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றனர்.
மேல்மருவத்துார் போலீசில், ஊர் பொதுமக்கள் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த மேல்மருவத்துார் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.