/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியருக்கு விருது பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியருக்கு விருது
பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியருக்கு விருது
பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியருக்கு விருது
பச்சையப்பன் கல்லுாரி பேராசிரியருக்கு விருது
ADDED : ஜூன் 12, 2025 02:17 AM

காஞ்சிபுரம்:மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், தேசிய அளவில், உயர்கல்வி நிறுவனங்களுக்கான, 'ஐடியாஸ் 4 லைஃப்' என்ற யோசனை கூறும் போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி பேராசிரியருக்கு மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் சார்பில், தேசிய அளவிலான, பல்கலை, உயர்கல்வித் துறை நிறுவனங்கள், மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கான, 'ஐடியாஸ் 4 லைஃப்' என்ற யோசனை கூறும் போட்டி நடந்தது. இதில், நாடு முழுதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து 1,318 கருத்துரு பெறப்பட்டது.
மூன்று சுற்றுகளாக மதிப்பீடு செய்யப்பட்டது. இதில், 'ஆற்றல் சேமிப்பு' என்ற தலைப்பின் கீழ், கருத்துரு அனுப்பிய காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் பூபாலனுக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது.
புதுடில்லி பிரகதி மைதானத்தில், கடந்த 5ம் தேதி நடந்த விழாவில், டில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோர், 50,000 ரூபாய் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி பாராட்டினர்.
இதுகுறித்து பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி உதவி பேராசிரியர் டாக்டர் பூபாலன் கூறியதாவது:
சோலார் கலனில் பயன்படக்கூடிய ஒரு உபகரணத்தை குறைந்த செலவில், மின்சாரத்தை சேமித்து கார்பன், நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன், முன் மாதிரி உபகரணத்தை தயாரித்ததற்காக, இந்திய அளவில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன்.
இந்திய அரசால், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் யு.ஜி.சி., வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.