Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆவடியில் நிலம் மோசடி இருவருக்கு 'காப்பு '

ஆவடியில் நிலம் மோசடி இருவருக்கு 'காப்பு '

ஆவடியில் நிலம் மோசடி இருவருக்கு 'காப்பு '

ஆவடியில் நிலம் மோசடி இருவருக்கு 'காப்பு '

ADDED : ஜன 11, 2024 01:07 AM


Google News
ஆவடி:அம்பத்துார், லெனின் நகர், 20 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜாராம், 61.

இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில் குறிப்பிட்டிருப்பதாவது:கொரட்டூர், ஸ்ரீ மூகாம்பிகை நகரில் என் பெயரில், 4,800 சதுர அடி நிலம் இருந்தது. அந்த நிலத்தின் ஒரு பகுதியை 2021ல் விற்று, மீதமுள்ள நிலத்தில் கட்டடம் கட்ட வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்தேன்.

அப்போது, என்னுடைய பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, போலியான ஆவணங்கள் தயார் செய்து, கொரட்டூரைச் சேர்ந்த விஜி என்பவர், என் தங்கை எனக்கூறி அவரது பெயரில் செட்டில்மென்ட் செய்தது தெரிந்தது. பின், அந்த நிலத்தை மூன்று பகுதிகளாக பிரித்து கொளத்துார், திருமலை நகரைச் சேர்ந்த கொத்த சுப்பராயுடு, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த பழனி மற்றும் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோருக்கு கிரைய பத்திரம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த நிலத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாய். நில மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறியிருந்தார்.

இது குறித்து விசாரித்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகாவைச் சேர்ந்த பூஞ்சோலை, 36 மற்றும் புழல் அடுத்த புத்தகரத்தைச் சேர்ந்த பிரேம் குமார், 36 ஆகியோரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us