/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்கு ஏற்பாடுகாஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்கு ஏற்பாடு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்கு ஏற்பாடு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்கு ஏற்பாடு
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தரிசனத்திற்கு ஏற்பாடு
ADDED : ஜன 01, 2024 06:57 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர் கூறியதாவது:
ஆங்கில புத்தாண்டு தினமான இன்று, காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவில் தெற்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்படுவர். அம்மனை தரிசித்த பின், வடக்கு கோபுர வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக வடக்கு கோபுர வாசல் பகுதியில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் மற்றும் குடிநீர் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கோவிலில் கட்டண தரிசனம், சிறப்பு தரிசனம் என, எதுவும் இல்லை. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தனுர்மாத பூஜை நிறைவு பெற்றதும், மதியம் 1:30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம்.
மதியம் நடை சாற்றப்பட்டு, மீண்டும் 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:00 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறந்திருக்கும்.
காஞ்சி சங்கர மடத்திலும் ஆங்கில புத்தாண்டையொட்டி காலையில் சிறப்பு அபிஷேகமும், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.