ADDED : ஜன 11, 2024 01:15 AM
மாமல்லபுரம் ஆந்திர மாநிலம், பத்மாநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத், 50. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில், உறவினர்களுடன் வழிபட்டுவிட்டு, மாமல்லபுரத்திற்கு வந்தார்.
நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு, கடற்கரை கோவில் பகுதியில் கடலில் குளித்த போது, அலையில் சிக்கி நீரில் மூழ்கினார். அவருடன் வந்த உறவினர்கள், அவரை விரைந்து மீட்டனர். ஆனால், ராம்பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், முதியவரின் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.