/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு
தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு
தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு
தருமர் பட்டாபிஷேகத்துடன் அக்னி வசந்த விழா நிறைவு
ADDED : மே 20, 2025 01:10 AM
செவிலிமேடு,
காஞ்சிபுரம் செவிலிமேடு திரவுபதியம்மன் சமேத தருமராஜர் கோவிலில் கடந்த மாதம் 30ம் தேதி அக்னி வசந்த மஹாபாரத பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவையொட்டி தினமும், மதியம் 1:30 மணி முதல், மாலை 5:30 மணி வரை திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கூட்ரோடு கோவிந்தராஜ், மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். திருவடிராயபுரம் முனுசாமி கவிவாசித்து வந்தார்.
கடந்த 8ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், நெடும்பிறை பொன்னியம்மன் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின், மஹாபாரத நாடகம் நடந்து வந்தது.
இதில், கடந்த 12ம் தேதி அர்ச்சுனன் தபசும், நேற்று முன்தினம் காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடந்தது.
நேற்று தருமர் பட்டாபிஷேகம் என்ற தலைப்பில் சொற்பொழிவும், இரவு மேடை நாடகத்துடன், 20 நாட்களாக நடந்து வந்த அக்னி வசந்த விழா நிறைவு பெற்றது.