ADDED : ஜன 06, 2024 11:46 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், வேளாண் உட்கட்டமைப்பு திட்டம் குறித்து, விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு, காஞ்சிபுரம் வேளாண் விற்பனை துணை சீனிராஜ் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பிரின்ஸ் கிளமென்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகள் கடன் வசதி பெறும் ஆலோசனைகள் குறித்து, வேளாண் விற்பனை துறையினர் எடுத்துரைத்தனர்.
குறிப்பாக, சேமிப்பு கிடங்குகள், விளைப் பொருட்களை தரம் பிரிக்கும் இயந்திரங்கள் வாங்குவது, பதப்படுத்தும் மையங்கள் கட்டுதல் ஆகிய பல்வேறு பணிகளுக்கு கடன் வசதி பெறுதல் குறித்து, வேளாண் விற்பனை துறையினர் ஆலோசனை வழங்கினர்.