/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நிதி விடுவிக்க பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை நிதி விடுவிக்க பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை
நிதி விடுவிக்க பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை
நிதி விடுவிக்க பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை
நிதி விடுவிக்க பி.டி.ஓ.,க்களுக்கு அறிவுரை
ADDED : மார் 18, 2025 12:16 AM
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சிகளில், துாய்மை பாரத இயக்கத்தில், தனி நபர் கழிப்பறை கட்டும் திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற பயனாளிளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலரின் வாயிலாக, அவரவர் வங்கி கணக்கு வாயிலாக நிதி விடுவிக்கப்படுகிறது.
இனி மேல், சார் நிலை கருவூல அலுவலகங்களின் வாயிலாக, நிதி விடுவிக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.